தெலங்கானாஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் – ஆசிரியர் தினம் வாழ்த்து தெரிவித்தார்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தெலங்கானா ஆளுநர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆசிரியர் தினம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: வளரும் தலைமுறையினருக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பித்து, சிறந்த சமுதாயத்தை உருவாக்கப் பணியாற்றுபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழ்வதுடன், நல்ல குடிமக்களை உருவாக்கி, சிறந்த தேசத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்குமகத்தானது. ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
+ There are no comments
Add yours