இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் அறிமுக இயக்க படம் ‘சிகாடா’

Estimated read time 1 min read
Spread the love

ஒரே கதையுடன், 4 வெவ்வேறு மொழிகளில், வித்தியாசமான 24 ட்யூன்களுடன் ஒரே டைட்டிலுடன் தயாராகும் ஒரு புதிய வடிவிலான பான் இந்தியா படம்

இசையமைப்பாளர்கள் சிலர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை வெளியே கொண்டுவரும் விதமாக இயக்குநராக மாறும் ஆச்சர்ய நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவது உண்டு. இதற்கு முன்னதாக இசையமைப்பாளர்கள் எஸ்.எஸ்.குமரன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட சிலர் டைரக்சனில் இறங்கி முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் மலையாளத்தில் எட்டு படங்களுக்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா நான்கு மொழிகளில் உருவாகும் ‘சிகாடா’ படத்திற்கு இசையமைப்பதுடன் இப்படத்தின் வாயிலாக இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

சிகாடா
சிகாடா

இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானா டைரக்சனில் நுழைந்துள்ள முதல் படமாக ‘சிகாடா’ அமைந்துள்ளது. வந்தனா மேனன் மற்றும் கோபகுமார்.P இருவரும் தீர்னா பிலிம்ஸ் அன்ட் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழில் இயக்குநர் விக்ரமன் படம் மூலமாக அறிமுகமாகி பிரபலமான மற்றும் பல தமிழ் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ள ரஜித் CR இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சுந்தர்.சியின் தலைநகரம்-2 படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்பை வழங்கியதன் மூலம் பிரபலமான ஜாய்ஸ் ஜோஸ் இப்படத்தில் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காயத்ரி மயூரா கதாநாயகியாக நடிக்கிறார்.பெங்களூரு, சோலையூர், அட்டப்பாடி (தமிழக எல்லை), வாகமன் மற்றும் கொச்சி உள்ளிட்ட அழகான இடங்களில் ‘சிகாடா’வின் படப்பிடிப்பு நடை பெற்றிருக்கிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடா என நான்கு மொழிகளில் இப்படம் நேரடியாகவே படமாக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பணியாற்றியுள்ள ஸ்ரீஜித் எடவானா “காதல் என் கவியே” மற்றும் “நெஞ்சோடு சேர்த்து” உள்ளிட்ட ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து பிரபலமாக அறியப்படுபவர்.இப்படத்தின் பாடல்களை நவீன் கண்ணன் எழுதியிருக்கிறார்.சில பிரத்யேகமான இடங்களில் அழகான காட்சிகளை படமாக்க மிகப்பெரிய முயற்சியை ஒளிப்பதிவாளர் நவீன்ராஜ் வழங்கியிருக்கிறார். இவற்றில் சில இடங்களை அடைவதற்கு படக்குழுவினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கடும் சிரமங்களுடன் நடந்தே சென்றுள்ளனர். நாயகன் ரஜித் சில கடினமான நிலப்பரப்புகளில் காட்டெருமை, காட்டு நாய்கள் ஆகியவற்றுடன் டூப் நபர்களை பயன்படுத்தாமல் நடித்திருக்கிறார் என்கிறார் இயக்குநர் ஸ்ரீஜித் எடவானா.ஒவ்வொரு மொழிக்குமான சுவையையும் இயற்கைத்தன்மையையும் தக்கவைத்துக்கொள்ளுமாறு வெவ்வேறுவிதமான ட்யூன்களால் தனித்தன்மையான பாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் வெளியாகவுள்ள பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகப் போகின்றன. ஒலி வடிவமைப்பு இந்த சர்வைவல் த்ரில்லரின் முக்கிய ஈர்ப்பு அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours