கோழி தொக்கு செய்முறை

Estimated read time 1 min read
Spread the love

கோழி தொக்கு செய்முறை

நீங்கள் அடிக்கடி கோழிகறி  சமையல் செய்பவரா ?   இந்த இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி சாப்பிட வேண்டும் என்று திட்டம் போடுகிறீர்களா? அப்படி இருந்தா  கோழி  தொக்கு உடன்  செய்து சாப்பிடுங்கள்.  இந்த கோழி தொக்கு சப்பாத்திக்கே அல்ல  சாதம் , புலாவ் களில் கூட அற்புதமாக இருக்கும்.  இந்த கோழி  கிட் பேச்சாளர்களுக்கு ஏற்றது. மேலும் இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சுவையாக இருக்கும்.

கோழி தொக்கு எப்படி செய்வது என்று அறிய வேண்டுமா?

கோழி தொக்கு செய்முறைக்கான எளிய செய்முறை கீழே உள்ளது. படித்து சுவைத்து உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

* கோழி – 1 கிலோ * வெங்காயம் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது) * இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் * பச்சை மிளகாய் – 2
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் * மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் * மல்லித்தூள் – 1 டீஸ்பூன் * சீரக தூள் – 1/2 டீஸ்பூன் * சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன் * மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் * உப்பு – ருசிக்கேற்ப * கறிவேப்பிலை – சிறிது * கொத்தமல்லி – சிறிது.

  செய்முறை

* முதலில் கோழியை தண்ணீரில் நன்றாக கழுவவும். * பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து  வைக்கவும் . * பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் 5 நிமிடம்  பொறிக்கவும்.

* மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். * பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, நறுக்கிய  தக்காளியை சேர்த்து கலக்கவும். * பின் மசாலா பொடிகளை சேர்த்து கலந்து, 1/2 கப் தண்ணீர் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். * அதன் பிறகு பொரித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி மேலே கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான  கோழி தொக்கு ரெடி.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours