கே கே மேனன் -நேர்மையான காவல் துறை அதிகாரி
பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்துக் செல்லும் இந்த கிரைம் திரில்லரில் கே கே மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஒளிபரப்பப்பட தயாராக இருக்கும் இந்தத் தொடரில் தனது பாத்திரம் குறித்துப் பேசுகையில் கே கே மேனன் கூறினார், “இஸ்மாயில் கத்ரி என்ற நான் ஏற்று நடித்திருக்கும் இந்தக் கதாபாத்திரம் பல அடுக்குகளாலான சிக்கல் நிறைந்த ஒன்று. அவர் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி. ஆனால் மோசமான ஒரு மகன் மீது பாசத்தை பொழியும் ஒரு தந்தையாகவும் இருக்கிறார். அனைத்து குற்றங்களிலிருந்தும் பம்பாய் நகரத்தை விடுவித்து மேம்படச்செய்ய ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இயங்குகிறார், ஆனால் மறுபுறம், அதற்கு நேர்மாறாக தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி, நகரிலுள்ள குற்றவாளிகளின் கும்பலால் ஆட்டிவைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். தன்னைச் சூழும் தீவினைகளுக்கு அடிபணியாமலிருக்க அனைத்து சோதனைகளையும் எதிர்த்துப் போராடும் இஸ்மாயில் தனது இரத்தமும் சதையுமான தனது மகனே குற்றவாளிகளின் மத்தியில் ஒரு புதிய தலைவனாக அவதாரமெடுப்பதை காண நேர்கிறது. இந்த கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் ஷுஜாத் மற்றும் ரென்சிலின் ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை தெளிவாகவும் மற்றும் துல்லியமாகவும் இருந்த காரணத்தால் , இந்த பாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு எளிதாக இருந்தது. இது போன்ற அடிவயிறைக் கலங்கச்செய்யும் மயிர்க்கூச்செறியும் கதையில் என்னையும் ஒரு அங்கமாக செயல்படச் செய்ததற்கு பிரைம் வீடியோ மற்றும் எக்செல் எண்டர்டெயின்மென்ட்டின், ரென்சில் மற்றும் ஷுஜாத் ஆகியோருக்கு எனது நன்றி. .
+ There are no comments
Add yours