ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா – கனிமொழி

இன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள மணல்மேடு பகுதியில், கனிமொழி கருணாநிதி எம்.பி தொகுதி நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழாவில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் AB.ரமேஷ், திருச்செந்தூர் நகர மன்ற தலைவர் சிவ ஆனந்தி உள்ளிட்ட உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours