தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகவே இருக்கிறது – உதயநிதி

Estimated read time 1 min read
Spread the love

தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகவே இருக்கிறது – உதயநிதி

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர், காது கேட்கும் கருவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

DMK
DMK

சனாதானம் குறித்து 200 ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறோம். தற்போது பாஜவின் 7.5லட்சம் கோடி ஊழல் குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் பேச வேண்டியது கட்டாயம்.அத்துடன் பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் அந்த தேர்தலிலும் தோல்வியடைந்துவிட்டால் அதிமுக மன திருப்பதி அடைந்துவிடும்

அதிமுக தொடர்ந்து ஐந்து தேர்தலில் தோல்வியடைத்து வருகிறது. அதனால் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக இப்போது ஆதரிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் அந்த தேர்தலிலும் ஒரேயடியாக தோல்வியடந்துவிட்டால் அதிமுக மன திருப்பதி அடைந்துவிடும்.

தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகவே இருக்கிறது.வருகின்றன தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பி இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றார்.

You May Also Like

More From Author

1 Comment

Add yours

+ Leave a Comment